Local

இறக்குமதி செய்வதற்கு வங்கியில் 100 வீத வைப்புச் செய்ய வேண்டும் மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களை இறக்குமதி  செய்வதற்கு 100 வீத வைப்புத் தொகையை வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது,

கையடக்கத் தொலைபேசி,தொலைகாட்சி உள்ளிட்ட இலத்திரனியல்  வீட்டு உபகரணங்கள் இறக்குமதியின் போது 100 வீத வைப்பு அத்தியவசியமானது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்ய 100 வீத வைப்புத் தொகையை வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் – மத்திய வங்கி

மேலும் ஆடை  அணிகலன்கள்,குளிரூட்டிகள் வீட்டு பயன்பாட்டு உபகரணங்கள், பழவகைகள் ,வாசனைத் திரவியங்கள் மற்றும் சில உணவு  இறக்குமதிகளின் போது இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது,

நாட்டில் டொலர்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது,

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading