Local

இறந்த பெண் திடீரென எழுந்த அதிசயம்

கடந்த சனிக்கிழமை பரகுவே நாட்டில் 50 வயதுப் பெண் ஒருவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்தார்கள். ஏற்கனவே கர்பப்பை கான்சர் இவருக்கு இருந்தது. மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவரது உடல் செயல் இழந்தது. இதனை அடுத்தே மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி. அவரை பிணப் பையில் அடைத்து அருகே உள்ள கிரியை மேற்கொள்ளும், நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கே உடலை கழுவி சுத்தம் செய்து, சவப்பெட்டியில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை ஆரம்பிக்க முன்னர் குறித்த பெண்ணின் கைகள் அசைவதை அவதானித்த ஊழியர் ஒருவர், அப்பெண்ணை தட்டி பார்த்த வேளை. அவர் திடீரென கண் முழித்து விட்டார். பிணப் பை பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது.

கிளேடி என்னும் இந்த பெண் தற்போது கணவரோடு வீட்டுக்கு சென்றுவிட்டதாக மேலும் அறியப்படுகிறது. மனித உடல் மிக அதிசயம் மிக்கது. அது தன்னை பாதுகாக்க எந்தவகையிலும் முயற்சிகளை எடுக்கும். உயிரை பாதுகாக்க சப்த நாடிகளையும் அடக்கிய உடல், போதிய அளவு உடல் நிலை தேறிய உடனே உடலை மீண்டும் இயக்க ஆரம்பித்துவிட்டது. இதுவே நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading