Sports

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் இலங்கை மகளிர் அணிக்கு வௌ்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading