Local

இலங்கைக்கு GSP Plus சலுகையை இரத்துச் செய்ய EU யோசனை!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் GSP பிளஸ் வரிச் சலுகைத் தி;ட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்களிக்கும் நேரத்தில் 40 பேர் சபையில் இருக்கவில்லை.

இலங்கையின் மனித உரிமை நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிவில் பிரதிநிதிகள் பல்வேறு வகையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

2017 மே 19ஆம் திகதி, நல்லாட்சி ஆட்சிக் காலத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது உட்பட பல நிபந்தனைகளுக்கு இலங்கை உடன்பட்டதால், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading