இலங்கையர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எச்சரிக்கை
இலங்கையில் GovPay பெயரைப் பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் செலுத்துமாறு கோரும் போலி குறுஞ்செய்திகள் பரவி வருவதாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பபடும் செய்திகள் மற்றும் அதில் வழங்கப்படும் இணைப்புக்கள் முற்றிலும் போலியானது என்றும், அவை இணைய மோசடியின் ஒரு பகுதி என்றும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
GovPay தளத்தின் ஊடாக மோசடி
அத்துடன், GovPay தளத்தின் ஊடாக இவ்வாறான அபராதங்களைச் செலுத்துமாறு எந்தவொரு அரச நிறுவனமும் குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை என்றும் அமைச்சு பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புறக்கணிக்கவும், அதிலுள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம், தனிப்பட்ட அல்லது வங்கிக் கணக்கு விபரங்களைப் பகிர வேண்டாம், மற்றும் இத்தகைய செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

You must be logged in to post a comment.