Local

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையில் வீழ்ச்சி!!

2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025 ஏப்ரல் இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது 0.7% வீழ்ச்சியாகும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 260.8 மில்லியன் டொலர்களை வாங்கி 4 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளது. அதன்படி, 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி வாங்கிய டொலர்களின் நிகர தொகை 256.8 மில்லியன் டொலர்கள் ஆகும்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading