இலங்கையின் ஊழல் ஒழிப்பு திட்டத்திற்கு ஆதரவு! அமெரிக்க அறிவிப்பு!!
அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயாரென அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You must be logged in to post a comment.