Local

இலங்கையின் தற்போதைய மோசமான நிலைமை பிரான்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் பிரான்ஸ் ஊடகமொன்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான பிரான்ஸின் லெசார்ட்ஸ் நிறுவனமே இலங்கையின் கடன் நிலை தொடர்பான தகவல்களை முழுமையாக ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை கணக்காய்வு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான பிரான்ஸின் லெசார்ட்ஸ் வழங்கிய விசேட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 9700 கோடி அமெரிக்க டொலர் கடன் சுமையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த கடன்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், நாட்டின் கடன் சுமை குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிக்கை செய்வதற்கும் கணக்காய்வு செய்யப்பட்டது.

கணக்காய்வு அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் இலங்கை 4700 கோடி அமெரிக்க டொலர் (47 பில்லியன்) வெளிநாட்டுக் கடனுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5000 கோடி டொலர் (50 பில்லியன்) உள்நாட்டு கடனுக்கு உட்பட்டது. தற்போது 50 பில்லியன் டொலர் கடன் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை கடனை கணக்காய்வு செய்தபோது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 203 ரூபாயாகும்.

தற்போது டொலர் ஒன்றின் பெறுமதி 355 இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளமையினால் கடன் சுமை மேலும் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading