Jobs

இலங்கையின் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கான கூட்டுறவை ஏற்படுத்தும் DIMO Academy மற்றும் HomeServe Germany

 

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் தொழிற்பயிற்சிப் பிரிவான DIMO Academy ஆனதுநிறுவல்கள்வீடு பழுதுபார்ப்புபராமரிப்புகாப்புறுதிச் சேவைகளை வழங்கும் முன்னணி HVAC (வெப்பதட்பகாற்றோட்ட சேவைநிறுவனமான HomeServe Germany உடன் அண்மையில் ஒரு சிறந்த கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதுஉலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகைமைகளைக் கொண்ட உள்நாட்டு இளைஞர்களுக்குஜேர்மன் கட்டட சேவைத் துறையில் உறுதிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் தொழிற்கல்வியை வலுப்படுத்துவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

இந்த கூட்டுறவின் கீழ், DIMO Academy ஆனதுஜேர்மன் தொழில்சார் தரங்களின் அடிப்படையில் உலகத் தரம் வாய்ந்த தகுதியை வழங்கவுள்ளதுஇது ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் (AHK) அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலை பொறியியலில் ஜேர்மன் டிப்ளோமாவை பெறுவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுக்கும்ஜேர்மனியில் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆரம்பிப்பதை உறுதி செய்வதற்காகஇப்பட்டதாரிகள் ஜேர்மன் மொழிப் பயிற்சியையும் பெறுவார்கள்இந்த பாடநெறி முழுமையடைந்ததும்சான்றுதலளிக்கப்பட்ட பட்டதாரிகள் HomeServe Germany இனால் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்இது ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் திறமையான நிபுணர்களாக மாறுவதற்கு அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

குறிப்பாக HVAC துறையில் வலுசக்தி செயற்றிறன்நிலைபேறான கட்டுமானம்நகரமயமாக்கல் ஆகிய விடயங்களால் வழி நடாத்தப்படும் திறன் வாய்ந்த கட்டட சேவை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உலகளாவிய தேவையை இந்த கூட்டாண்மை பூர்த்தி செய்கிறது.

DIMO பேலியகொடையில் உள்ள அதி நவீன பயிற்சி நிலையத்திலும் முதலீடுகளை செய்துள்ளதோடு, 2025 பெப்ரவரியில் இது திறக்கப்படவுள்ளதுஇந்த நிலையமானது விரிவான தொழில்நுட்ப வளங்களுடன் தொழிற்படவுள்ளதோடுஉள்ளூர் கட்டட சேவைகள் துறையை மேம்படுத்தும் அதே வேளையில்மாணவர்கள் உயர்ந்த சர்வதேச தரத்திற்கு பயிற்சியளிக்கப்படுவதையும் உறுதி செய்யும்.

இது பற்றி DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்குழுமத்தின் கல்விப் பிரிவின் தலைவருமான தில்ருக்ஷி குருகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “DIMO Academy நிறுவகத்தின் Diplomas in Automobile Mechatronics and Plant Engineering பாடநெறிகள்ஜேர்மனியில் A மட்ட தகுதிகள் என சான்றளிக்கப்பட்டவையாகும்பட்டத்தை நிறைவு செய்தவர்கள் உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணிபுரிய தகுதியுடையதாக்குகின்றனர். Diploma in Plant Engineering பாடநெறியையும் DIMO Academy அறிமுகப்படுத்தியுள்ளதுஇது கட்டட சேவைகளில் இளைஞர்களுக்கு பல்வேறு உலகளாவிய தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading