Jobs

ரோயல் – தோமஸ் படகோட்டப் போட்டியில் அடுத்த தலைமுறை தோமஸ் கல்லூரி படகோட்ட அணிக்கு புத்துயிரளிக்கும் பெல்வத்த

 
பெல்வத்த நிறுவனம், ரோயல் – தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான படகோட்டப் போட்டியில் (Royal Thomian Sailing Regatta), கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் படகோட்ட அணிக்கு அனுசரணையாளராக இணைந்துள்ளது. இது இளைஞர் மேம்பாடு, விளையாட்டின் விசேடத்துவம், எதிர்கால இலங்கைத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்கான அந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது.
ஒரு பெருமை மிக்க முழுமையான 100% இலங்கை பால் வர்த்தகநாமம் எனும் வகையில், விளையாட்டுக் களத்திலும் களத்திற்கு அப்பாலும் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்கள், நம்பிக்கை, ஈடுகொடுக்கும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் பாதையில், அவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை பெல்வத்த அறிந்துள்ளது. புனித தோமஸ் கல்லூரியின் படகோட்டக் குழுவிற்கான தனது அனுசரணை மூலம், ஒழுக்கம், குழுப்பணி, உறுதிப்பாடு, விளையாட்டின் மகத்துவம் ஆகிய விழுமியங்களைத் தழுவி, இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது ஆற்றலை தொடர்வதற்காக ஊக்குவிப்பதை இந்நிறுவனம் நோக்காகக் கொண்டுள்ளது.
ரோயல் – தோமஸ் படகோட்டப் போட்டியானது இளம் படகோட்டிகளுக்குத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், தங்களது சக வீரர்களுடன் போட்டியிடவும், விளையாட்டின் சவால்கள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ளவுமான ஒரு தளத்தை வழங்குகிறது. படகோட்டப் போட்டி என்பது கவனம், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு, சரியான முடிவெடுத்தல் ஆகிய விடயங்களைக் கொண்டது. இது இளம் பங்கேற்பாளர்கள் தமது குணநலன்களைக் கட்டியெழுப்பவும், ஒரு பொதுவான இலக்கை நோக்கிச் செயற்படுவதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்ளவுமான ஒரு மதிப்புமிக்க அனுபவமாகவும் அமைகிறது.
தோமஸ் கல்லூரி அணிக்கான பெல்வத்த நிறுவனத்தின் ஆதரவானது, இலங்கை இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பங்களிக்கும் விளையாட்டு மற்றும் கல்விசாரா செயற்பாடுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அதன் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இளம் திறமையாளர்களை வளர்ப்பது, வகுப்பறைக்கு அப்பாலும் விரிவடைந்து செல்கிறது என்பதை உறுதியாக நம்பும் ஒரு நிறுவனம் எனும் வகையில், நம்பிக்கை, ஈடுகொடுக்கும் தன்மை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையைக் கட்டியெழுப்புவதில் விளையாட்டு அனுபவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நிறுவனம் அங்கீகரிக்கிறது.
இந்த அர்ப்பணிப்பானது இலங்கை குடும்பங்களுக்கு, தரமான பால் போசணையை வழங்குவதில் பெல்வத்த நிறுவனம் கொண்டுள்ள கவனம் மூலம் பூரணப்படுத்தப்படுகிறது. இதன் பன்முக தயாரிப்பு வகைகளில் பால் மா, வெண்ணெய், யோகட், யோகட் பானம் உள்ளிட்ட பால் உற்பத்திப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதோடு, இவை நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. பால் போசணை தொடர்பான தமது கவனத்தை, இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளுக்கான ஆதரவுடன் இணைப்பதன் மூலம், சமூகங்களின் நல்வாழ்விற்கும் ஆரோக்கியமான, வலுவான ஒரு தலைமுறையின் வளர்ச்சிக்கும் பெல்வத்த தொடர்ச்சியாக பங்களிக்கிறது.
தமது அனுசரணை குறித்து பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், “பெல்வத்த ஆகிய நாம், உரிய போசாக்கும் இளைஞர் மேம்பாடும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்ல வேண்டுமென கருதுகிறோம். ரோயல் – தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான படகோட்டப் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி படகோட்ட அணியை ஆதரிப்பதிலும், விளையாட்டு மூலம் விசேடத்துவத்தை தேடும் இந்த இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இப்போட்டியில் இக்குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.” என்றார்.
இது போன்ற கூட்டணிகள் மூலம், பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அடுத்த தலைமுறையினரின் ஆற்றலில் முதலீடு செய்வதற்குமான தமது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. புனித தோமஸ் கல்லூரி படகோட்ட அணிக்கான அதன் அனுசரணையானது, போசணை, விளையாட்டு, தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம், இலங்கைக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல் எனும் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு பிரதிபலிக்கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading