இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் துவால் கடற்கரைக்கு அப்பால் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் ஒக்டோபர் (29) இன்று உள்ளூர் நேரப்படி காலை 7:06 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு பாதிப்பில்லை
இந்த நிலநடுக்கம் துவாலில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில், 128 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஆழம் குறைவாக இருந்ததால், சுனாமி அல்லது உயிர், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இலங்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள நிலையில், நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.