Student File திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்துகிறது
மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டுக் கல்வி தொடர்பான நிதி ஏற்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில், கல்விக் கட்டணம் செலுத்துதல், கல்வி நிதியுதவி, அந்நியச் செலாவணி சேவைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணப் பலன்களை ஒன்றிணைக்கும் DFCC Student File திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகமொன்றில் அனுமதி பெறுவது ஒரு முக்கியமான சாதனை மைல்கல், ஆனால் அது நிதித் திட்டமிடலின் கடினமான காலகட்டத்தின் தொடக்கமாகவும் மாறுகிறது. குடும்பங்கள் கல்விக் கட்டணம் செலுத்துதல், அந்நியச் செலாவணியைப் பெறுதல், செலவின் ஒரு பகுதிக்கு நிதியளித்தல் மற்றும் பயணத்திற்குத் தயாராகுதல் போன்றவற்றை, பெரும்பாலும் கடுமையான, குறுகிய காலக்கெடுவிற்குள் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.
DFCC Student File திட்டம், வாடிக்கையாளர்கள் இந்தச் சேவைகளை அணுகுவதற்கு ஒரே தளத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்தும் வசதிகள், சலுகை வட்டி வீதங்களில் கல்விக் கடன்கள் மற்றும் சலுகையுடனான அந்நியச் செலாவணி மாற்று வீதங்கள் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி தொடர்பான கொடுப்பனவுகளைச் செய்யும்போது, முக்கிய நாணயங்களில் பரிவர்த்தனை செய்யலாம்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைவரும், தயாரிப்புகள் மற்றும் திட்டங்கள், தனிநபர் மற்றும் வணிக வங்கிப் பிரிவின் தலைமை அதிகாரியுமான கலாநிதி அசித பின்னதுவ, “வெளிநாட்டுக் கல்வி அனுமதி என்பது, குடும்பத்தில் மற்றொரு முக்கியமான செயல்முறையின் தொடக்கமாக மாறுகிறது. இதில் பணம் செலுத்துதல், நிதி உதவி, வெளிநாட்டு நாணயம் மற்றும் பிரயாண ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும். இதில் உள்ள சிரமம் பெரும்பாலும் ஒரேயொரு தேவையாக மாத்திரம் இருப்பதில்லை, மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றில் பலவற்றை ஒருங்கிணைக்க வேண்டியிருப்பதே பாரிய சவாலாகும். DFCC Student File திட்டம் முக்கிய நிதிச் சேவைகளை ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் இந்தக் கட்டத்தை மிகுந்த தெளிவுடன் அணுகி, அடுத்து வரவிருப்பவற்றிற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியும்,” என்றார்.
மேலும், இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான விமானக் கட்டணச் சலுகைகள் மற்றும் பிரயாணத் திட்டங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இது, புறப்படுவதற்கு முன்பு தேவைப்படும் நடைமுறை ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச் செலவுகள், பயணக் காப்பீடு, மடிகணினிகள் மற்றும் பிற சாதனங்களுக்கு DFCC கடன் அட்டைகள் மூலம் பிரத்தியேகத் தள்ளுபடிகள் மற்றும் வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களைப் பெறலாம். இந்த தெரிவுகள், தகுதியான செலவுகளைத் தவணைகளாக செலுத்த இடமளிக்கின்றன. இது, வெளிநாட்டில் படிப்பதற்குத் தயாராவதோடு தொடர்புடைய சில செலவுகளைக் குடும்பங்கள் நிர்வகிக்க உதவுகிறது.
வசதிகள், முன்னுரிமை வீதங்கள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகியவை தகுதிக்கான அளவுகோல்கள், கடன் அங்கீகாரம், கிடைக்கும்தன்மை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
DFCC Student File என்பது, வெளிநாட்டு கல்விக்கான நடைமுறைத் தேவைகளை வங்கிச் சேவைகளுடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் DFCC வங்கி வழங்கும் ஆதரவை விரிவுபடுத்துகிறது. மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற கல்வி வாய்ப்பிற்காகத் தயாராவதில் கவனம் செலுத்தும்போது, அவர்களின் குடும்பங்கள் இந்தச் செயல்பாட்டிற்கான நிதி அம்சங்களைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள இது உதவுகிறது.
வெளிநாட்டு கல்விக்கான DFCC Student File குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் DFCC வங்கியின் இணையத்தளத்தைப் பார்வையிடலாம், அருகிலுள்ள DFCC வங்கி கிளைக்குச் செல்லலாம் அல்லது 011 235 0000 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளலாம்.

You must be logged in to post a comment.