Jobs

Pine Labs மற்றும் WEBXPAY இணைந்து இந்தியக் கொடுப்பனவு அனுபவத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துகின்றன

  • Pine Labs மற்றும் WEBXPAY நிறுவனங்கள் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை இலகுவாக்குவதற்காக அண்மையில் மூலோபாய பங்குடைமை ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தமக்குப் பழக்கமான UPI, அட்டைகள் மற்றும் இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி இலகுவாகக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிவதுடன், இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களும் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

    2025 ஆம் ஆண்டில் 530,000க்கும் அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், இந்தியா இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், இந்திய சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டில் பயன்படுத்தும் கொடுப்பனவு முறைகளை இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும் .

    இந்திய மத்திய வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட PA-CB கட்டமைப்பின் கீழ், இலங்கையில் பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்கும் (Payment Aggregator ) இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இத்தகைய பங்குடைமை ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தியாவில் உரிமம் பெற்ற பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் சர்வதேச பணம் செலுத்தும் சேவை வழங்குநர்களுடன் நேரடியாக பங்குடைமை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இதன் மூலம் இந்தியப் பயணிகள் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கும் மற்றும் பாதுகாப்பான முறையில் தமக்குப் பழக்கமான கட்டண முறைகளைப் பயன்படுத்த முடியும்.

    இந்தப் பங்குடைமையின் மூலம் இலங்கை முழுவதும் விருந்தோம்பல், சுற்றுலா, சில்லறை வர்த்தகம் மற்றும் இணையவழி வர்த்தகம் போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் WEBXPAY இன் வர்த்தக வலையமைப்பால் UPI, UPI AutoPay, முக்கிய இந்திய அட்டை வழங்குநர்களின் அட்டைகள், 100+ க்கும்

     

  • மேற்பட்ட வங்கிகளின் Net Banking, EMI மாற்றங்கள் மற்றும் Credit on UPI ஆகிய கட்டண முறைகளை ஏற்றுக்கொள்ள முடியும். 

    இதன் மூலம், T+1 அடிப்படையில் அடுத்த வர்த்தக தினத்திலேயே பணப்பரிவர்த்தனைகளைத் தீர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்தத் தீர்வானது WEBXPAY இன் தற்போதைய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், முதல் நாளிலிருந்தே இதனைப் பரந்த அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வர்த்தகர்களுக்குக் கிடைக்கிறது.

    இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் பல்வேறு கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குச் செல்வதால், இந்தப் பங்குடைமையின் ஊடாக இலங்கை வர்த்தகர்கள் கணிசமான வர்த்தக  நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த வசதியைப் பயன்படுத்துவதற்காக வர்த்தகர்கள் தமது தற்போதைய கொடுப்பனவு முறைகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

    Pine Labs நிறுவனத்தின் நிறைவேற்று துணைத் தலைவரும் இணையவழி வர்த்தகப் பிரிவின் தலைவருமான Tanya Naik இது தொடர்பாக தெரிவிக்கையில்,”இந்திய நுகர்வோர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போதும் தமது நாட்டில் பயன்படுத்தும் எளிமையானதும் பழக்கமானதுமான கட்டண முறைகளையே எதிர்பார்க்கின்றனர்’’ என்றார். PA-CB திட்டத்தின் கீழ் இந்தச் சேவையை அறிமுகப்படுத்திய முதல் நாடு இலங்கை என்றும், எதிர்காலத்தில் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட ஏனைய சந்தைகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    WEBXPAY நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் திலக் பியதிகம தெரிவிக்கையில் , இந்திய நுகர்வோர் தமக்குப் பழக்கமான கட்டண முறைகளை இலங்கை வர்த்தகர்களின் இணையவழிக் கட்டணக் கட்டமைப்புகளுடன் இணைப்பதன் மூலம், கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களைக் குறைக்க முடியும் என்றார். இதன் மூலம் வர்த்தகர்கள் தமது வருமானத்தை அதிகரிக்கவும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை கடந்த டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேலும் இலகுவாக்குவதில் இந்தப்பங்குடைமையானது முக்கியமானதொரு படியாகும். அத்துடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், உள்நாட்டு வர்த்தகர்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இது உதவும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading