World Mastercard உலோகக் கடனட்டையுடன் தனது Private Wealth சேவையை அறிமுகப்படுத்திய CDB
சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிஸினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி. 2026 செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ரோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தில் (RCGC) நடைபெற்ற CDB September Monthly Medal 2026 போட்டித்தொடரின்போது, தனது CDB Private Wealth சேவையை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. வசதிபடைத்த மற்றும் உயர் நிகரச் சொத்து மதிப்பைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நிதி மற்றும் வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும் CDB இன் பயணத்தில் இந்த அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
CDB Private Wealth வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட CDB Private Wealth World Mastercard White Metal கடனட்டை, இந்நிகழ்வின் பிரதான அம்சமாகத் திகழ்ந்தது. உலகளாவிய பயன்பாட்டு வசதியுடன், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண மற்றும் வாழ்க்கைமுறைச் சிறப்புரிமைகளை ஒருங்கிணைக்கும் இந்த அட்டை, புதிய சேவையின் உயர்தரத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
இந்நிகழ்வின் முக்கிய தருணமாக, முதலாவது அட்டையை CDB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார, RCGC அணித்தலைவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தனவிடம் கையளித்தார். இக்கையளிப்பு புதிய சேவையின் உத்தியோகபூர்வ அறிமுகத்தைக் குறித்ததுடன், சிறப்புத்தன்மை, அங்கீகாரம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவை ஆகியவற்றின் மீதான அதன் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியது.
வசதிபடைத்த மற்றும் உயர் நிகரச் சொத்து மதிப்பைக் கொண்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட இலட்சியங்கள், முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கைமுறைகளை மையமாகக் கொண்டு CDB Private Wealth வடிவமைக்கப்பட்டுள்ளது. “The Art of Wealthcare” என்ற தத்துவத்தின் வழிகாட்டுதலுடன், தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வுகள், அர்ப்பணிப்புமிக்க உறவு முகாமைத்துவம், முன்னுரிமைச் சேவை மற்றும் பிரத்தியேக வாழ்க்கைமுறை அனுபவங்களை இச்சேவை ஒருங்கிணைக்கிறது.
பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தகுதிபெறும் CDB Private Wealth வாடிக்கையாளர்கள் World Mastercard White Metal கடனட்டையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, தெரிவுசெய்யப்பட்ட ஊக்குவிப்புகள் மற்றும் சலுகைகள், கொன்சியர்ஜ் எனப்படும் தனிப்பட்ட தேவைகளை ஒருங்கிணைக்கும் உதவிச் சேவைகள், அர்ப்பணிப்புமிக்க வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் உலகெங்கிலும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளுக்கான வரம்பற்ற அணுகல் உள்ளிட்ட பிரத்தியேகச் சிறப்புரிமைகளை அனுபவிக்க முடியும்.
வாடிக்கையாளர்களின் செல்வப் பயணத்திற்கு ஆதரவளித்து, அதனை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இச்சேவை, நிதி நிபுணத்துவத்தையும் உயர்தர வாழ்க்கைமுறை நன்மைகளையும் இணைக்கிறது. இதன்மூலம், உயர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்ட தனது வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான பெறுமதியை உருவாக்குவதில் CDB கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் மேலும் உறுதிப்படுத்துகிறது.
CDB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில்:
“CDB Private Wealth அறிமுகமானது, வசதிபடைத்த மற்றும் உயர் நிகரச் சொத்து மதிப்பைக் கொண்ட எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் சேவையாற்றும் முறையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. செல்வம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் தனிப்பட்டது என்பதையும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான இலட்சியங்கள், முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் உள்ளன என்பதையும் ‘The Art of Wealthcare’ என்ற எமது தத்துவம் அங்கீகரிக்கிறது. முதலாவது CDB Private Wealth World Mastercard Metal கடனட்டையை மஹேல ஜயவர்தனவிடம் கையளித்தமை, எமக்குப் பெருமைக்குரிய மைல்கல்லாகவும், நாம் வழங்க விரும்பும் உயர்தரமான, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தின் வலுவான வெளிப்பாடாகவும் அமைந்தது. அர்ப்பணிப்புமிக்க உறவு முகாமைத்துவம், தேவைகளுக்கேற்ற நிதித் தீர்வுகள் மற்றும் பிரத்தியேகச் சிறப்புரிமைகள் ஊடாக, எமது வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள, நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்ப நாம் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.
Mastercard இன் இலங்கைக்கான நாட்டுமுகாமையாளர் மகேஷா அமரசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:
“இலங்கையில் வங்கியல்லாத நிதி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் முதலாவது World Mastercard Metal கடனட்டையை அறிமுகப்படுத்துவதற்காக CDB உடன் இணைந்து செயற்படுவதில் Mastercard மகிழ்ச்சியடைகிறது. வசதிபடைத்த மற்றும் உயர் நிகரச் சொத்து மதிப்பைக் கொண்ட நுகர்வோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரத்தியேகத் தயாரிப்பு, உயர்தர உலோக அட்டையின் நேர்த்தியுடன் Mastercard இன் உலகளாவிய ஏற்றுக்கொள்ளல், நம்பகமான பாதுகாப்பு மற்றும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண, வாழ்க்கைமுறை மற்றும் வெகுமதி நன்மைகளை ஒருங்கிணைக்கிறது. கட்டணமற்ற விமான நிலைய ஓய்வறை அணுகல், உள்நாட்டு மற்றும் சர்வதேசச் செலவினங்களுக்கான மேம்பட்ட வெகுமதிகள் மற்றும் Mastercard Travel & Lifestyle Services சேவைகளுக்கான அணுகல் போன்ற சிறப்புரிமைகளை அட்டைதாரர்கள் அனுபவிக்க முடியும். CDB Private Wealth வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்துடன் இணைந்து, இச்சேவை சிறப்பான பெறுமதியையும் சௌகரியத்தையும் வழங்குவதுடன், நாட்டின் உயர்தர நிதி மற்றும் கொடுப்பனவுத் தீர்வுகளுக்கான புதிய தரநிலையையும் நிறுவுகிறது” என்றார்.
கோல்ஃப் மற்றும் வர்த்தக சமூகத்தினரை ஒன்றிணைத்த CDB September Monthly Medal 2026 போட்டித்தொடரின் ஓர் அங்கமாக இந்த அறிமுகம் இடம்பெற்றது. போட்டித்தன்மைமிக்க கோல்ஃப் விளையாட்டு, விருந்தோம்பல் மற்றும் உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்விருநாள் நிகழ்விற்கு 300 இற்கும் மேற்பட்ட போட்டிப் பதிவுகள் கிடைத்தன. RCGC கோல்ஃப் மைதானத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வீரர்கள் போட்டியிட்டனர். சிறப்பான 62 Nett புள்ளிகளைப் பதிவுசெய்த ஷிரோமல் பெர்னாண்டோ, ஒட்டுமொத்த Nett வெற்றியாளராகத் தெரிவானார்.
தற்போது மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள CDB மற்றும் RCGC இடையிலான கூட்டாண்மை, விளையாட்டு அனுசரணையையும் தாண்டி வளர்ச்சியடைந்துள்ளது. CDB Private Wealth பிரதிபலிக்கும் சிறப்புத்தன்மை, சாதனை மற்றும் நீடித்த உறவுகள் ஆகிய விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் அர்த்தமுள்ள தளமாக இது உருவெடுத்துள்ளது.
CDB Private Wealth ஐப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிகவும் முக்கியமானவை எவை என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே செல்வப் பராமரிப்பு ஆரம்பமாகிறது. அந்தப் புரிதலின் அடிப்படையில், அவர்களது ஒட்டுமொத்த செல்வப் பயணம் முழுவதும் பொருத்தமான நிதி நிபுணத்துவம், தனிப்பட்ட கவனம், முன்னுரிமை அணுகல் மற்றும் வாழ்க்கைமுறைச் சிறப்புரிமைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
சாதனை, தனித்துவம் மற்றும் சிறப்பான அனுபவங்களை மதிக்கும் நபர்களை ஒன்றிணைத்த ரோயல் கொழும்பு கோல்ஃப் கழகம், இந்த அறிமுகத்திற்குப் பொருத்தமான பின்னணியை வழங்கியது. வெற்றிகரமான போட்டித்தொடரை நிறைவுசெய்த பரிசளிப்பு விழா, CDB Private Wealth மற்றும் அதன் பிரத்தியேக World Mastercard White Metal கடனட்டைக்கான புதிய அத்தியாயத்தையும் தொடக்கிவைத்தது.
CDB பற்றி
சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிஸினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் நான்கு மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். நிதிச் சேவைகளில் புத்தாக்கம், நிலைபேற்றுத்தன்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் வலுவான நிறுவன ஆளுகை ஆகியவற்றுக்காக CDB அங்கீகாரம் பெற்றுள்ளது. டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தும் CDB, மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்புடைய தீர்வுகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

You must be logged in to post a comment.