Local

இலங்கையில் அதிகளவிலான வாகனங்கள் இறக்குமதி!!

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட, 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் , அதன் எண்ணிக்கை 160,590.

அவற்றில் 37,115 கார்கள், 8,820 முச்சக்கர வண்டிகள், 2,806 டிராக்டர்கள் மற்றும் 2,156 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள் என்பன 18 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட மாதமாக கடந்த செப்டெம்பர் மாதம் பதிவாகியுள்ளதுடன், 48,957 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014 முதல் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட ஆண்டு 2015 ஆகும். அந்த ஆண்டு புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 668,907 ஆகும்.

– போக்குவரத்து திணைக்களம் –

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading