Local

இலங்கையில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அரச வங்கிகள்

சில அரச நிறுவனங்களின் கடன் சுமை காரணமாக அரச வங்கிகள் கடுமையான ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், நமது பொருளாதாரத்திற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய மூன்று நிறுவனங்களும் பெரும் சுமையாக மாறியிருந்தன.

குறிப்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம், 840 பில்லியன் ரூபா (84,000 கோடி ரூபா) கடன் செலுத்த வேண்டியுள்ளது. அந்தக் கடன் தொகையானது அரச வங்கிகளின் கட்டமைப்பை எந்தளவிற்கு பாதித்தது என்றால், அரச வங்கிகள்கூட கடுமையான ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டன.

எனவே, இந்த அரச நிறுவனங்கள் விற்கப்பட வேண்டும், தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக உருவாகத் தொடங்கியது. கடந்த காலத்தில் இந்த நிறுவனங்கள் பெருமளவில் அரசியல்மயமாக்கப்பட்டிருந்தன.

அரசியல் மேடைகள் அமைத்ததும், ஆட்சியைப் பிடித்த பிறகு மற்றவர்களைத் தாக்குவதற்காக இந்த நிறுவனங்களிலிருந்துதான் குழுக்கள் அனுப்பப்பட்டார்கள்.

ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல் | President Emphasizes Rural Development

ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் தேவைகளுக்காக நிறுவனத்திற்குப் புதிய ஊழியர்களை நிரப்பும் கலாச்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக 4 பொறியியலாளர்கள் மற்றும் Jet A-1 எரிபொருள் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக விமான நிலையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 10 ஊழியர்கள் போன்ற அவசியமான சில ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தைப் போன்று அமைச்சர்களின் பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை நிரப்புவதை நாங்கள் முழுமையாக நிறுத்திவிட்டு, அரசியல்மயமாக்கலற்ற முறையில் விஞ்ஞான ரீதியாக இந்த நிறுவனங்களை செயற்படுத்தி வருகிறோம் என்றார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading