Local

இலங்கையில் இன்று அதிகூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவானது

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாளாக இன்றைய நாள் (06) பதிவாகியுள்ளது. 

அதன்படி, இன்றைய நாளில் மாத்திரம் இதுவரை 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் பணி புரிந்த தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 707 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading