Local

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மின் தடை? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நாளை அல்லது நாளை மறுதினம் மின்தடை ஏற்படாது எனவும், அது குறித்த சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சாரசபை ஊழியர்களும் நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஏனைய தொழிற்சங்கங்களும் நாளைய தினத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படலாம் என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் மின்சார சபை குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாறு மின்தடை ஏற்படலாம் என கருதி நாட்டின் பல பாகங்களில் உள்ள மக்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக   எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading