இலங்கையில் உலக சாதனை படைத்த ”பரதநாட்டியம்”
கொழும்பு, காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த நிகழ்வு, புதிய #உலக சாதனையாக அரங்கேறியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி எனக் குறிப்பிடப்பட்ட இந்த முயற்சி, கின்னஸ் உலகச் #சாதனை பதிவுக்காக முன்வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளை ஒருங்கிணைந்து நிகழ்த்திய #காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்நிகழ்வின் நடுவராக #ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர், ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் #ஆய்வு செய்து இதற்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவித்தார்.
“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான #சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் வைத்து கையளித்தார்.
சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், #இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் #பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பங்குபற்றிய அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

You must be logged in to post a comment.