கொழும்பு சிட்டி சென்டரின் Dining Gallery ல் தனித்துவமான ஐந்து வகை உணவு மையங்களை Food Studio அறிமுகப்படுத்தியுள்ளது
கொழும்பு சிட்டி சென்டரின் Dining Gallery ல் தனித்துவமான ஐந்து வகை புத்தம்புதிய உணவு மையங்களை அறிமுகப்படுத்தியுள்ள Food Studio, அங்கு தனது சேவையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் கொழும்பில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்ற உணவு விருந்துத் துறை ஆகியவற்றில் மிக முக்கியமானதொரு புதிய அத்தியாயமாக இது மாறியுள்ளது.
இம்மையத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்ற Primo, முன்பு One Galle Face Mall (OGF) ல் இயங்கி தற்போது CCC ல் முதல்முறையாக காலடியெடுத்து வைக்கும் Hotel Manoli, புதுப்பொலிவு பெற்றுள்ள Bamboo Boy மற்றும் இரு புதிய அறிமுகங்களான Wide Eyes மற்றும் Kimono ஆகியன அவற்றுள் அடங்கியுள்ளன. இந்த ஐந்து வர்த்தகநாமங்களும் இணைந்து CCC க்கு வருகை தருகின்றவர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பல்வகைப்பட்ட சுவை, உணவு வடிவங்கள் மற்றும் பல்வேறுபட்ட தருணங்களுக்கு ஏற்றவற்றை வழங்குகின்றன.
தற்காலத்து நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வகைப்பட்ட உணவு வடிவங்களை ஒன்றுசேர வழங்கும் தரம், சௌகரியம், மற்றும் பல்வகைத் தெரிவு கொண்ட உணவு அனுபவங்களை வழங்குவதில் Food Studio தொடர்ச்சியாக காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பை இந்த உணவு மையங்களின் திறப்பு பிரதிபலிக்கின்றது.
Food Studio ன் முகாமைத்துவப் பணிப்பாளரும், Liberty Lands & Developments ன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நவீத் காதர் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Food Studio ன் பயணம் CCC இலேயே ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்தும் வளர்க்கும் எமது முயற்சிகளும் அதனை மையமாகக் கொண்டே அமையும் என்பது எமது திடமான நம்பிக்கை. இந்த ஐந்து புதிய உணவு வர்த்தகநாமங்களுடன் கொழும்பு சிட்டி சென்டரிலுள்ள Dining Gallery க்கான எமது மீள்வருகையை வெறுமனே மீள்ஆரம்பம் என்று கூறிவிடுவதுடன் நின்றுவிட முடியாது. கொழும்பு நகரம் பரிணாம வளர்ச்சிக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகவுள்ள ஒரு காலகட்டத்தில் இது இடம்பெறுகின்றது. வருகை தருகின்ற விருந்தினர் ஒவ்வொருவரும் மறக்க முடியாத அளவுக்கு தரமான உணவை சுவைத்து, தாம் செலவு செய்கின்ற பணத்திற்கு உண்மையான மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.”
Food Studio ன் பிரதம நிறைவேற்று அதிகாரி நதீம் ரஜாப்தீன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “அசல் உணவு வடிவங்களை ஒரே கூரையின் கீழ் வழங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளமான Food Studio, தனது பயணத்தில் தனது சொந்த வர்த்தகநாமங்களை தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளது. இங்கு தோன்றிய வர்த்தகநாமங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான தருணங்களாக மாறின. அருமையான பாண் வகை உணவுகள் அருமையான உள்ளீடுகள் என்பதன் மீது கவனம் செலுத்தியுள்ள Primo உணவகம், மத்திய கிழக்கின் சௌகரியமான உணவுகள் மீது கவனம் செலுத்தியுள்ள Hotel Manoli உணவகம், தென்கிழக்காசிய நடைபாதை வியாபார பாணியிலான உணவு விற்பனையில் கவனம் செலுத்தியுள்ள Bamboo Boy உணவகம், ஜப்பானிய அடையாளத்தை அச்சொட்டாக வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்தியுள்ள Kimono உணவகம், மற்றும் எமது விசேட கோப்பி மற்றும் பேஸ்ட்ரி உணவு வகை மீது கவனம் செலுத்தியுள்ள Wide Eyes உணவகம் என ஒவ்வொன்றும் தனித்துவமானவை.”
Food Studio ன் உணவுத்துறைப் பணிப்பாளரான ஜெசி அஸ்டன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் ஏற்கனவே நேசிக்கின்ற சுவை வடிவங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள உணவுகளை வழங்குவதே ஐந்து வேறுபட்ட வடிவங்களை அறிமுகப்படுத்துவதன் பின்னணியுள்ள சிந்தனையாகும். இந்த ஐந்து உணவகங்களினதும் குறிக்கோள் ஒன்று தான்: மக்கள் அன்றாடம் நம்பி வந்து உண்ணக்கூடிய உணவுகள், தாம் செலவு செய்கின்ற ஒவ்வொரு ரூபாவுக்கும் மதிப்பை உணரச் செய்கின்ற உணவுகள்.”
கொழும்பில் தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்ற உணவு விருந்து துறையில் தனது பங்கினை தொடர்ந்தும் வலுப்படுத்தி, தனித்தனி இடங்களுக்கும் அப்பால் வளர்ச்சி பெற்று விரிவாக்கப்படக்கூடிய வகையில் உணவக வடிவங்களைக் கட்டியெழுப்பும் தனது குறிக்கோளை மீண்டும் உறுதிப்படுத்தியவாறு Food Studio தொடர்ந்தும் சிறப்பாகப் பயணிக்கின்றது.

You must be logged in to post a comment.