Jobs

John Keells Properties  நிறுவனத்தின் Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில் 300 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்றுத் தீர்ந்துள்ளன

 

கொழும்பு, இலங்கை – ஜுன் 2026 – John Keells Properties (JKP)) நிறுவனம் கொழும்பின் மையப்பகுதியில் புத்தம்புதிதாக ஆரம்பித்துள்ள Vauxhall DSTRCT என்ற குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தில் அது ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களுக்குள் 300 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில் நிலவுகின்ற வலுவான கேள்வி மற்றும் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிர்மாணச் செயற்திட்டங்கள் மீதான தொடர்ச்சியான நம்பிக்கை ஆகியவற்றை இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் மத்தியில் இதற்கு பெரும் ஆர்வம் நிலவுவதை இந்த சாதனை எடுத்துக்காட்டுவதுடன், அமைவிடம், வாழ்வியல், மதிப்பு, மற்றும் நீண்ட கால முதலீட்டு வாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டவாறு ஈர்ப்பினை ஏற்படுத்தும் வகையில் மிகவும் சிறந்த நகர்ப்புற குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதை இது மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

 

கொழும்பு 02, வொக்சோல் வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Vauxhall DSTRCT என்ற நிர்மாணச் செயற்திட்டம் நகரத்தின் முக்கிய வணிக, வாழ்வியல், கல்வி, மற்றும் போக்குவரத்து மையங்களுக்கு இலகுவாகச் சென்று வருவதற்கான வசதியை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகின்றது. நவீன நகர்ப்புற வாழ்வியலின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், துடிதுடிப்பான நகர மையச் சூழலில் சௌகரியம், இலகுவான போக்குவரத்து, மற்றும் சமூகத்தை நோக்காகக் கொண்ட அனுபவங்களை ஒன்றிணைத்து வழங்குகின்றது.

 

ஆதனப் பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இச்சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:

“செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, முதல் மூன்று மாதங்களுக்குள் 300 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகளை விற்பனை செய்துள்ள சாதனை மிகவும் முக்கியத்துவமானது என்பதுடன், John Keells Properties மீது கொள்வனவாளர்கள் தொடர்ச்சியாக காண்பித்து வரும் வலுவான நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் பலத்த வரவேற்பும், கேள்வியும் மிகவும் ஊக்கமளிக்கின்றது. Vauxhall DSTRCT கொண்டுள்ள மதிப்பை வாடிக்கையாளர்கள் உணர்ந்துகொள்வது அதிகரித்துச் செல்வதால், இதற்கு அதிகளவிலான ஆர்வமும், ஈர்ப்பும் காணப்படுவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், கவர்ச்சியான விலை, மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட குடியிருப்புக்கள், விரிவான வாழ்வியல் வசதிகள், மற்றும் ஸ்மார்ட்-ஹோம் தொழில்நுட்பங்கள் போன்ற காரணிகள் அதன் வெற்றிக்குப் பங்களித்துள்ளதுடன், ஜோன் கீல்ஸ் வர்த்தகநாமத்தின் மீது கொள்வனவாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் முக்கியத்துவம்வாய்ந்த நிர்மாணச் செயற்திட்டங்களை வழங்குவதில் எமது சிறப்பான கடந்தகால வரலாறு ஆகியவற்றை இச்சாதனை மைற்கல் பிரதிபலிக்கின்றது. வீட்டு உரிமையாளர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் நீடித்த மதிப்பைத் தோற்றுவிக்கும் மிகச் சிறந்த மற்றுமொரு குடியிருப்பு முகவரியொன்றை வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.”

 

பல்வகைப்பட்ட வாழ்வியல் மற்றும் முதலீட்டுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று, இரண்டு. மூன்று, மற்றும் நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட குடியிருப்புக்களின் பரந்த தெரிவுடன், 60 மாடிகளைக் கொண்ட வானளாவிய குடியிருப்புத் தொகுதியாக Vauxhall DSTRCT நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அன்றாட வாழ்வை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பரந்தளவிலான வாழ்வியல் வசதிகள், சமூக ஒருங்கிணைப்பு இட வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள், மற்றும் ஸ்மார்ட்-ஹோம் தொழில்நுட்பம் போன்றவற்றை குடியிருப்பாளர்கள் அனுபவிக்க முடியும்.

 

Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் வலுவான கேள்வி கிடைக்கப்பெற்றுள்ளமை, கொழும்பில் மிகவும் கேள்வி மிக்க புதிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்கள் மத்தியில் ஒன்றாக அதனை நிலைநிறுத்தியுள்ளது.

 

மேலதிக விபரங்களை 190, வொக்சோல் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள John Keells Properties விற்பனைக் கூடத்திற்கு வருகை தந்தோ அல்லது +94 711 638 638 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ, அல்லது www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்தினூடாகவோ அறிந்து கொள்ள முடியும்.

 

கொழும்பின் வான்பரப்பினை மாற்றியமைத்து, இலங்கையின் நவீன குடியிருப்புத் துறையை வளர்ப்பதில் John Keells Properties நிறுவனம் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக பாரிய திருப்புமுனையை ஏற்படுத்துவதற்குப் பங்களித்துள்ளது. Crescat City ல் அமைந்துள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, City of Dreams Sri Lanka – Cinnamon Life, Viman, மற்றும் கண்டியில் Victoria Golf Resort ல் பிரத்தியேக ஆதனங்களுடன் நாட்டின் புகழ்பூத்த நிர்மாணச் செயற்திட்டங்கள் பலவற்றை இந்நிறுவனம் நிர்மாணித்துள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்கள் மூலமாக, இலங்கையில் உயர் ரக குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்களுக்கான தராதரங்களை நிலைநாட்டி, வடிவமைப்பு, வாழ்வியல் ஒன்றிப்பு, மற்றும் சமகால நகர்ப்புற வாழ்வியல் ஆகியவற்றில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களையும் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading