இலங்கையில் எரிபொருளுக்காக 4072 மில். டொலர் செலவு…!!!
இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6 வீத அதிகரிப்பாகும்.
அதற்கமைய, மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதி செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அதன்படி 2026 ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5வீத அதிகரிப்பாகும்.
2025 ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
அதற்கமைய, மத்திய வங்கியின் தரவுகளின்படி , 2026 ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்கன் டொலர்களால் உயர்ந்துள்ளது. மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

You must be logged in to post a comment.