Local

இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த விலை திருத்தத்தில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்நாட்டில் எரிவாயுவின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3470 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், நுகர்வோருக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள பரிசீலிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால் இலங்கையின் பொருளாதாரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading