Local

இலங்கையில் காடுகளை நோக்கி செல்லும் மக்கள்!

இலங்கையில் காடுகளில் விளையும் பலாப்பழங்களை அறுவடை செய்வதற்காக மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதிப்பத்திரத்தை இலவசமாக வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு, வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
காடுகளில் விளையும் பலாப்பழம் மற்றும் ஈரப்பலாக்காய்களை அறுவடை செய்ய மக்களை அனுமதிப்பதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியை ஓரளவு குறைக்க முடியும் என்றும் அமைச்சர் வனத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 3000 ஹெக்டேர் வன நிலங்கள் இருப்பதாகவும், அந்த நிலங்களில் பலாப்பழம் உற்பத்தியாகி மரத்தடியில் விழுந்து பயன்பாடின்றி அழுகி வருவதாகவும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டே விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த முடிவை எடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading