Cinema

நான் நடித்த படத்தை நானே பார்க்க மாட்டேன் பிரபல நடிகை தெரிவிப்பு!

“நடிகையர் திலகம்” படத்தில் சாவித்திரியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

மகேஷ்பாபுவுடன் நடித்துள்ள “சர்க்கார் வரிபாடா” படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில்,

“என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை. நடிப்பின் மீது எனக்கு உள்ள ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கு முன்பும் நினைத்துக் கொள்வேன்.
நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதேபோல வணிக ரீதியாக அந்த படங்கள் வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான திருப்தி கிடைக்கும்.

வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள் உள்ள நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும். நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading