Local

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான எவரும் நேற்று இனங்காணப்படவில்லை

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான எவரும் நேற்று இனங்காணப்படவில்லை என நுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11.55 மணிக்கான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொரோனாத் தொற்றாளர்களது எண்ணிக்கை 863 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களது எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் 511 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன் 114 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரகின்றனர் எனத் தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading