Jobs

நூற்றாண்டு கால நம்பிக்கை: இலங்கையின் Most Valuable Spirits Brand நாமமாக DCSL PLC நிறுவனத்திற்கு அங்கீகாரம்

 

நம்பகமான வர்த்தகநாமங்களை உருவாக்குவதிலும், நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்வதிலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் தனது பயணத்தில், மற்றொரு முக்கிய மைல்கல்லை Distilleries Company of Sri Lanka  PLC (DCSL) நிறுவனம் எட்டியுள்ளது. இந்நிறுவனம் Brand Finance நிறுவனத்தால் இலங்கையின் Most Valuable Spirits Brand நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

பாரம்பரியம், தரம், புத்தாக்கம் மற்றும் உள்ளூர் சந்தை குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றின் ஒன்றிணைப்பால் தலைமுறை தலைமுறையாகக் கட்டியெழுப்பப்பட்ட DCSL-இன் வர்த்தகநாமத்தின் வலிமையையும் நீடித்த மதிப்பையுமே இந்த விருது பிரதிபலிக்கிறது. 1913-இல் நிறுவப்பட்ட DCSL, கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு பாரம்பரிய மதுபான உற்பத்தி நிறுவனமாகத் தொடங்கி, இன்று உற்பத்தி, பெருந்தோட்டங்கள், பொதியிடல், போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகள் எனப் பல்வேறு துறைகளில் தனது இருப்பை விரிவுபடுத்தி, பன்முக செயற்பாடுகளைக் கொண்ட ஒரு நிறுவனமாக இது பரிணமித்துள்ளது.

 

நிறுவனத்தின் நற்பெயரை உருவாக்கிய விழுமியங்களைத் தக்கவைத்துக்கொண்டே, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனே அதன் பயணத்தை வடிவமைத்துள்ளது. நவீன உற்பத்தித் திறன்கள், தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் செயல்பாட்டுச் சிறப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கி DCSL பயணித்தது. இத்தகைய முதலீடுகள், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்கள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப செயல்படுவதோடு, நிறுவனத்தின் வர்த்தகநாமங்களை வலுப்படுத்தவும் உதவியுள்ளன.

 

இந்த அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் கசுன் ஜயவர்தன அவர்கள், “இந்த சாதனை என்பது, தலைமுறை தலைமுறையாக நுகர்வோர் எங்கள் வர்த்தகநாமங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், DCSL நிறுவப்பட்டபோது அமைக்கப்பட்ட தரநிலைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்பது கடந்த காலத்தை வெறுமனே திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல. மாறாக, நாம் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தித் தொடர்ந்து மேம்படுவதும், புதியனவற்றைப் புகுத்துவதும், எதிர்காலத்திற்காக மதிப்பை உருவாக்குவதுமே ஆகும்.”

 

DCSL-இன் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு, அதன் தயாரிப்புத் தொகுப்பு, உற்பத்தி செயல்முறைகள் மற்றும் நுகர்வோர் ஈடுபாடு என அனைத்திலும் பரந்துள்ளது. அதே நேரத்தில், அதன் வளர்ந்து வரும் ஏற்றுமதி அடிச்சுவடு, இலங்கை வர்த்தகநாமங்கள் அவுஸ்திரேலியா, தென் கொரியா, மாலைதீவு மற்றும் சீனா உள்ளிட்ட சந்தைகளை அடைய வழிவகுத்துள்ளது.

 

DCSL தனது உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதிலும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதிலும் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் இந்தக் கௌரவம் கிடைத்துள்ளது. தரம், புத்தாக்கம், நிலைபேற்றியல் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பொருத்தமான வர்த்தகநாமங்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.

 

எனவே, DCSL-ஐப் பொறுத்தவரை, இலங்கையின் மிகப் பெறுமதி வாய்ந்த மதுபான வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்படுவது, அதன் தற்போதைய வர்த்தகநாம வலிமைக்கான ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, தொடர்ச்சியான புத்தாக்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் பிரதிபலிப்புமாகும். இந்நிறுவனம் தனது அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கும் வேளையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையைப் பாதுகாப்பதிலும், வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் மதிப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading