Local

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த மூவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3400 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3258 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 129 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading