Local

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

நாட்டில் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல்முகாமில் இருந்த ஒருவரும் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 56 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.

இதன்படி மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2ஆயிரத்து 508 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading