இலங்கையில் சட்டவிரோத தங்க இறக்குமதி 1243 மில்லியன் ரூபா அபராதம்!
சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள், இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், சட்டவிரோத இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றுக்கு 179 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர், தங்கப் பொருட்களை இறக்குமதி செய்யும், அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும், சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், நேரடியாக இறக்குமதி செய்யாமல், மூன்றாம் தரப்பினர் ஊடாக கொள்வனவு செய்யப்படும் தங்கத்திற்கும், உற்பத்தி அறிக்கையினை ஆராய்ந்து, அதன் பிரகாரம் அபாராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
