இலங்கையில் சில ஊர்களுக்குக் குளிர்ச்சி, பல ஊர்களுக்கு வறட்சி!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

You must be logged in to post a comment.