Local

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலால் வீணடிக்கப்படும் மக்கள் பணம்!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 27.5 அங்குலம் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த முறை வாக்குப்பதிவின் நீளம் 26.5 அங்குலத்தில் இருந்தது.

வாக்குச்சீட்டில் அறை அங்குலம் அதிகரித்தால் மக்களின் 200 மில்லியன் ரூபா பணத்தை செலவிட நேரிடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 78 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading