ஹேமாஸ் மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது ‘Deep Resolve AI’ வசதி கொண்ட MRI ஸ்கேனரை நிறுவிய DIMO Healthcare
DIMO Healthcare நிறுவனம், தலவத்துகொடை ஹேமாஸ் மருத்துவமனையில் ‘Siemens Healthineers MAGNETOM Sola 1.5T MRI’ தொகுதியை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது Siemens Healthineers நிறுவனத்தின் ‘Deep Resolve AI’ தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கையின் முதலாவது MRI தொகுதி நிறுவப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இந்த நிறுவலுக்கு DIMO Healthcare இன் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயந்திரத்தின் உச்சபட்ச செயற்பாட்டுத் திறன் உறுதி செய்யப்படுகிறது.
‘Deep Resolve’ என்பது ஆழமான தொழில்நுட்ப ரீதியான கற்றலை (deep learning) பயன்படுத்தி தெளிவற்ற தன்மை போன்ற இடையீடுகளைக் குறைத்து, படத்தின் தரம் மற்றும் தெளிவுத்திறனை அதிகரிக்கும் AI இனால் இயக்கப்படும் புகைப்படத்தை மறுசீரமைக்கின்ற தொழில்நுட்பமாகும். இது ஸ்கேன் நேரத்தை 73% வரை குறைப்பதுடன், வழக்கமான ஸ்கேனிங் முறைகளை விட இரண்டு மடங்கு தெளிவுத்திறனை வழங்கக்கூடும். குறுகிய ஸ்கேன் நேரங்களை ஆதரிப்பதன் மூலமும், அசைவு காரணமான படச் சிதைவுக்கான சாத்தியக் கூறுகளைக் குறைப்பதன் மூலமும், Deep Resolve AI ஆனது MRI ஸ்கேன் செய்யும்போது நோயாளியின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
இது குறித்து, DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தெரிவிக்கையில், “நாட்டின் முதலாவது ‘Deep Resolve’ தொழில்நுட்பத்துடன் கூடிய MRI தொகுதியை நிறுவியிருப்பது இலங்கையின் நோயறிதல் புகைப்படவியல் திறன்களின் விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது எம்மால் வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அப்பாலான ஒரு விடயமாகும். நிறுவல் மற்றும் செயற்படுத்தல் முதல் பயன்பாட்டுப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவு வரை, மேம்பட்ட மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ நடைமுறையில் திறம்பட ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்ய, நாம் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறோம்.” என்றார்.
இது குறித்து, Hemas Hospitals & Laboratory வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவிக்கையில், “தலவத்துகொடையில் உள்ள ஹேமாஸ் மருத்துவமனையில், துல்லியமான மற்றும் சரியான நேரத்திலான நோயறிதல் பராமரிப்பை வழங்குவதற்கான எமது திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்கிறோம். இந்த அதிநவீன MRI தொகுதியானது எமது நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பைக் கொண்டு வருவதுடன், எமது சுகாதார வல்லுநர்களுக்கு மேம்பட்ட நோயறிதல் கருவிகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த தொழில்நுட்பமானது, நோயாளிக்கான பராமரிப்பிற்கு வழங்கும் மதிப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எமது மருத்துவமனையில் இவ்வசதியை செயற்படுத்துவதற்கு DIMO Healthcare உடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
MAGNETOM Sola இயந்திரமானது, ஒவ்வொரு நோயாளியினதும் தனிப்பட்ட உடலமைப்பு மற்றும் உடலியலுக்கு ஏற்ப தானாகவே சரிசெய்யும் ‘BioMatrix’ தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. இதன் மருத்துவப் பயன்பாடுகளில் நரம்பியல், இதயம், குருதிக் குழாய்கள், அடிவயிறு, இடுப்புப் பகுதி, மார்பகம், தசை மற்றும் என்புக்கூடு, புற்றுநோயியல் புகைப்படவியல் ஆகியனவும் உள்ளடங்குகின்றன. இந்தக் கட்டமைப்பு மூலம் வழங்கப்படும் ‘UltraFlex coils’ ஆனது மென்மையான, நெகிழ்வான, high-channel coils ஆகும். அவை உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படவியல் மற்றும் நோயாளிக்கான மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை வழங்குகின்றன. BioMatrix உடன் இணைந்ததாக, வசதியான மற்றும் மன அழுத்தமற்ற அனுபவத்திற்காக, ஒவ்வொரு நோயாளியினதும் தேவைக்கேற்ற வகையில் இயந்திரம் தன்னை அமைத்துக் கொள்கின்றது.
இந்த கட்டமைப்பானது மூளை மற்றும் முள்ளந்தண்டு பரிசோதனைகள், இதய MRI, குருதிக்குழாய் புகைப்படவியல், MRCP, முன்னிற்கும் சுரப்பி, மார்பக புகைப்படவியல் மற்றும் முழுமையான உடற்பரிசோதனைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான மேம்பட்ட புகைப்படவியல் அம்சங்களுக்கு ஆதரவளிக்கிறது. பிரத்தியேக உலோகப் பொருத்துகளால் ஏற்படும் படச் சிதைவு வரிசைகளும் (metal artifact reduction sequences), காந்த அதிர்வு (MR) நிபந்தனைக்குட்பட்ட உடல் பொருத்துகள் (implants) மற்றும் எலும்புகளுக்கான மாற்றீட்டு உலோகங்களைக் கொண்ட நோயாளிகளின் பரிசோதனைகளுக்கு ஆதரவளிக்கின்றன.
MAGNETOM Sola இயந்திரமானது கட்டமைப்பின் வலுசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சக்தி சேமிப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. Eco Power Mode மற்றும் பயன்பாடற்ற போது ஸ்கேனரை முடக்குதல் மற்றும் Deep Resolve உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம், இந்த தொகுதியினால் சுமார் 40% மின்சக்தி சேமிப்பை மேற்கொள்ள முடிவதனால், நிலைபேறான MRI செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
இலங்கையின் சுகாதாரத் துறையில் 65 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள DIMO Healthcare நிறுவனம், இந்த நிறுவலுக்கு ஆரம்பம் முதல் முடிவு வரையிலான முழுமையான சேவை ஆதரவை வழங்கும். இது MRI கட்டமைப்பின் திறனான மற்றும் நம்பகமான செயற்பாட்டை உறுதி செய்கிறது. நன்கு நிறுவப்பட்ட சேவை உட்கட்டமைப்பு மற்றும் Siemens Healthineers உடனான நெருங்கிய ஒத்துழைப்பின் ஆதரவுடன், DIMO Healthcare திறனான உபகரணப் பராமரிப்பை உறுதி செய்கிறது. இது MRI இயந்திரத்தை, ஹேமாஸ் மருத்துவமனைக்கு அதன் உரிய திறனில் இயக்குவதற்கான நம்பிக்கையை வழங்குவதுடன், சுகாதார வல்லுநர்கள் நோயாளர்களுக்கு சரியான நேரத்தில் துல்லியமான நோயறிதலை மேற்கொள்ள உதவுகிறது.
இதன் நிறுவல் தற்போது முழுமையடைந்துள்ள நிலையில், DIMO Healthcare மற்றும் ஹேமாஸ் வைத்தியசாலை ஆகியன இலங்கையின் சுகாதார உட்கட்டமைப்பில் முதலாவது ‘Deep Resolve’ வசதி கொண்ட MRI இயந்திரத்தை இணைத்துள்ளன. இது மேம்பட்ட, உயர்தர சுகாதாரத் தீர்வுகளை நோயாளிகளுக்கு மிகவும் அருகில் கொண்டு வருவதுடன், எமது சமூகத்திற்கு சிறந்த பராமரிப்பையும் வழங்குகிறது.
END

You must be logged in to post a comment.