World

அமெரிக்க செனட் தேர்தலில் வரலாறு படைத்த முதல் முஸ்லிம்!

அமெரிக்க செனட் தேர்தலில் வரலாறு படைத்த அப்துல் எல்-சயீத்! அமெரிக்க செனட்டுக்குத் தெரிவான முதல் முஸ்லிம்!🔥

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்களின் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்ததன் மூலம், அமெரிக்க செனட்டுக்குத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னாள் பொது சுகாதார அதிகாரியான அப்துல் எல்-சயீத், ஓய்வுபெறும் செனட்டர் கேரி பீட்டர்ஸ் காலியாக்கிய இடத்திற்காகப் போட்டியிட்டார். கட்சியின் வேட்பாளர் தெரிவுப் போட்டியிலும் வெற்றி பெற்று பொதுத் தேர்தலில் களமிறங்கியிருந்தார்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது அப்துல் எல்-சயீதின் முஸ்லிம் மத அடையாளம் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட குடியரசுக் கட்சியினர் அவரது மதப் பின்னணியை முன்வைத்து விமர்சனங்களைத் தெரிவித்தனர்.

அவரை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளையும் அப்துல் எல்-சயீத் நிராகரித்தார்.

குறிப்பாக, 2024 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மிச்சிகன் மாநிலத்திலேயே இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

2027 ஜனவரியில் புதிய அமெரிக்க காங்கிரஸ் கூடும்போது, அப்துல் எல்-சயீத் அமெரிக்க செனட்டின் முதல் முஸ்லிம் உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading