World

அமெரிக்கா வரலாற்றில் அதிக செலவிலான இடைக்காலத் தேர்தல் 2026 !

அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களிலேயே அதிக செலவிலான தேர்தலாக, இன்று (03) நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல் வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மொத்தம் 11.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுமென தேர்தல் நிதி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சுயாதீன அமைப்பான OpenSecrets கணித்துள்ளது.

இது, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் அதிகளவு நிதி நன்கொடை வழங்கியவராக கோடீஸ்வரர் எலான் மஸ்க் பதிவாகியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading