Local

இலங்கையில் ஜப்பானிய வாகனங்கள் இறக்குமதி செய்வதாக அறிவிப்பு!

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading