Local

இலங்கையில் பிரபல அமைச்சர் இராஜினாமா!

துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான பணம்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.அதற்கமைய, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க, விசாரணைகள் நிறைவடையும் வரை, தனது அமைச்சுப் பதவியில் இருந்து  நிமல் சிறிபால டி சில்வா விலகுவார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading