Local

இலங்கையில் மார்ச் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் துஷித்த ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும் 9 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுவதுடன் பின்பு மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று ஜெயவர்தன கூறினார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளின் விநியோகம் ஜனவரி 29இல் ஆரம்பமானது.

எனினும் தற்போதுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 250ஆயிரம் பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஏனெனில் ஒருவருக்கு 2 முறை மருந்து தேவையான அளவாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading