Local

இலங்கையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக அதிகரிப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு பதுக்கி வைக்கப்படும் பொருட்களை விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading