Local

மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி அணி வகுப்பில் இலங்கை முப்படைகள்!

பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி அணி வகுப்பில் இலங்கை முப்படைகளின் குழு ஒன்று கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகால சிம்மாசன ஆட்சிப் பொறுப்பை குறிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

ராணியின் நினைவாக ஜூன் 02 முதல் 05 வரை நடைபெற்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அணி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது

அணி வகுப்புநிறைவடைந்ததும், இலங்கை இராணுவக் குழு பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்ததுடன், முப்படையினர் இந்த அணி வகுப்பில் பங்குபற்றியமைக்காக இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நிகழ்வில் இலங்கைக் கொடி உயரமாகப் பறந்ததைக் கண்டு பெருமையடைவதாக இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading