Local

இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு பால்மா இறக்குமதிக்கு தடை?

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பால் மா இறக்குமதி செய்வதனை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 வருடங்களில் இலங்கையை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் எமது நாட்டில் 250,000 பசுக்கள் இருப்பதுடன், 35 சதவீத பால் உற்பத்தியே முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading