Local

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் யாசகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு தேசிய பிரச்சினை என பொதுக்கணக்குகள் குழு தெரிவித்துள்ளது.

பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தலைமையில் பொதுக்கணக்குகளுக்கான குழு கூடியது. இதன்போதே யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண சரியான வேலைத்திட்டம் தேவை என அக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

பல்கலைக்கழக மட்டத்தில் பிச்சைக்காரர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களம் பெறுவது முக்கியமானதாக இருக்கும் என்றும் அக்குழு கருதுகிறது.

அதிகரித்து வரும் யாசகர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு வேலைத்திட்டம் தேவை என்றும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading