Local

இலங்கையில் வாகன இறக்குமதிக்குத் தடை?

அடுத்த ஒரு வருடத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை கடந்த அமைச்சரவைக் கூட்டதின் போது தெரிவித்துள்ளார்.
நாணய பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துவருகிறது.
கொவிட்-19 தொற்றால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இலங்கை தற்போது நாணய மாற்று நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாணய பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அடுத்த ஒருவருடத்திற்கு வாகன இறக்குமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இறக்குமதி தடை நீட்டிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் அடுத்த ஒரு வருடத்திற்கு போதுமான வாகனங்களின் கையிருப்பில் உள்ளது என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading