Local

மசூதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள ஒரு மசூதியில் ஆறு ஏர் கண்டிஷனர்கள் வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாராயங்கஞ்ச் நதி துறைமுக நகரத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஒரு குழந்தை நேற்றே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்ற அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இன்று இருந்துள்ளதாக டாக்டர் சமந்தா லால் கூறினார்.

மேலும் 25 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தீக்காயங்கள் காரணமாக அவர்களின் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் ஆபத்தாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading