Local

இலங்கையில் வானிலிருந்து விழுந்த மர்மக் கல்!

கண்டியில் வானில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்று கண்பிடிக்கப்பட்டுள்ளது.
பேராதனை, ஜேம்ஸ் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெள்ளை நிறத்திலான இந்தக் கல் நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை வானில் இருந்து விழுந்திக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

“காலையிலோ அல்லது இரவிலோ விண்கல் என்று நாங்கள் நினைக்கும் பொருள் ஒன்று விழுந்து கிடந்தது. விண்கல்லின் ஒரு பகுதி தரையில் விழுந்துவிட்டது என்றே நாங்கள் நினைக்கின்றோம். மேலதிக விசாரணைகளுக்காக நாங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் அந்த கல்லை ஒப்படைத்துள்ளோம்” என பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி யட்டியன் தொட்டை சந்தானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதேபோன்ற வேறு கற்கள் அந்த பிரதேசத்தின் சுறு்றுவட்ட பகுதிகளில் பரிசோதிக்க பிரதேச மக்கள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவ்வாறான ஒன்றையும் கண்டுபிடிக்க முடியில்லை.
1605 கிராம் நிறையுடைய இந்த கல் 16 சென்றிமீற்றர் நீளமும் 7 சென்றி மீற்றர் உயரமும் கொண்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட போராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது விண்கல் என சந்தேகிக்க கூடிய பொருளாகவே உள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இவ்வாறான வேறு பகுதிகள் இல்லாமையினால் இது ஆற்றில் இருந்து அடித்து வந்த கல்லாக இருக்கலாம் என நினைக்கலாம். எனினும் இது இயற்கைக்கு மாறாக உள்ளது. விண்கல் பொழிவில் விழுந்தமைக்கான தன்மை இதில் காணப்படுகின்றது.
வெள்ளைக் கல்லில் சற்று எரிந்த தன்மை காணப்படுகின்றது. இதனை சோதனையிட்டு விண்கல்லா என்பதனை உறுதி செய்யப்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading