இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் பாரிய வீழ்ச்சி..!!
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் பாரியளவில் வீழ்ச்சி, அமெரிக்காவின் அதிரடி அறிக்கை!
இலங்கை 2025ஆம் ஆண்டில் சுமார் 5% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், நாட்டின் முதலீட்டுச் சூழல் தொடர்ந்தும் சவாலானதாகவே இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தனது 2026 முதலீட்டுச் சூழல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கான நேரடி அந்நிய முதலீடு (FDI) சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில் சுமார் 1% மட்டுமே எனவும், வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் பொதுவாகக் காணப்படும் 3%–4% அளவைவிடக் குறைவானதாகும் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை காணப்பட்ட போதிலும், ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை, அதிகாரத்துவத் தடைகள் மற்றும் அரச கட்டமைப்புக்குள் நிலவும் பிற சிக்கல்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் அதானி கிரீன் எனர்ஜியின் சுமார் 400 மில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டம் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

You must be logged in to post a comment.