Local

இலங்கையில் வெள்ளை நிற அரியவகை அணில் கண்டுபிடிப்பு!

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ – சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் வந்துள்ளது.

வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் கூண்டில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அணிலை அதிசயம் என்று கூறுவதுடன், பெருமளவானோர் வருகைத்தந்து பார்வையிடுகின்றனர்.

சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த அணில் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading