இலங்கையில் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்க தடை…!!!
இலங்கையில் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் எதிர்காலத்தில் புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரையைச் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை (NATA) மற்றும் மருத்துவ நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த விசேட அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொள்ளும் புகையிலைப் பாவனையை, வேரோடு அழிக்கும் நோக்கில் இந்த ‘தலைமுறைத் தடை’ (Generational Ban) முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எதிர்கால இலங்கை இளைஞர்களைப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாத்து, ஒரு சௌபாக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

You must be logged in to post a comment.