இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு..!!
மார்ச் மாதம் 2.2 வீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில் 2.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், 2026 ஏப்ரலில் 5.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாகக் காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதம் வரை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களின் கேள்வி அதிகரித்தமை மற்றும் ஏனைய பொருளாதாரக் காரணிகளே இந்த அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றன

You must be logged in to post a comment.