2026 ஆம் ஆண்டுக்கான Global Business Excellence விருதுகளில் ஈட்டியுள்ள இரட்டை வெற்றியை அம்பேவெல கொண்டாடுகிறது
இலங்கையின் முன்னணி உயர்தர புத்தம்புதிய பண்பு கொண்ட பால் வர்த்தகநாமமான அம்பேவெல, 2026 ஆம் ஆண்டுக்கான Global Business Excellence விருதுகளில், Most Iconic Brand மற்றும் Best Dairy Brand ஆகிய இரண்டு மதிப்புமிக்க அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது.
இந்த இரட்டை அங்கீகாரம், அம்பேவெலவிற்கு ஒரு பெருமைக்குரிய சாதனை மைல்கல்லாகும். இது பால் பிரிவில் அதன் சிறப்பையும், கடந்த 2 தசாப்தங்களாக இலங்கை நுகர்வோரிடையே அது பெற்றுள்ள நீடித்த நம்பிக்கையையும் கொண்டாடுகிறது.
இந்த விருதுகள் 2026 ஒக்டோபர் 6 ஆம் திகதி கொழும்பு 07 இல் உள்ள BMICH கண்காட்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் வழங்கப்பட்டன. ஐக்கிய இராச்சியத்தின் London Business Consultancy நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, Global Business Excellence விருதுகள், பல்வேறு தொழில்துறைகளில் உள்ள சாதனைகளையும் சிறப்புகளையும் அங்கீகரிக்கின்றன. இந்தத் திட்டம், இலங்கை கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள DEC இடமிருந்து நிறுவன அங்கீகாரத்தைப் பெற்றதுடன், SITC Campus வணிகப் பீடத்தின் வணிகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மதிப்பாய்விற்கும் உட்பட்டது.
Best Dairy Brand எனப் பெயரிடப்பட்டமை, பால் பிரிவில் அம்பேவெலவின் வலிமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கிறது, அதே நேரத்தில் Most Iconic Brand என்பது, இலங்கை நுகர்வோருடன் இந்த வர்த்தகநாமம் ஏற்படுத்தியுள்ள நீடித்த தொடர்பைப் பிரதிபலிக்கிறது.
அம்பேவெல பால் பொருட்கள், புத்தம்புதிய தன்மை மற்றும் தரத்தின் அடையாளமாகத் திகழும் ஒரு புகழ்பெற்ற பெயராகும். இலங்கையின் பசுமையான மலைநாட்டு மேய்ச்சல் நிலங்களிலிருந்து பெறப்படும் ஒவ்வொரு அம்பேவெல தயாரிப்பும், பண்ணையிலிருந்து குடும்பங்களைச் சென்றடையும் வரை மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யும் துல்லியமான செயல்முறையின் விளைவாகும். புதிய பால், சீஸ் மற்றும் யோகட் உள்ளிட்ட இதன் தயாரிப்பு வரிசையானது, தொடர்ந்து சிறந்த மதிப்பையும் தரத்தையும் வழங்குவதால், இது இலங்கையின் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஒரு முன்னணி உயர்தர புத்தம்புதிய பண்பு கொண்ட பால் வர்த்தகநாமமாக, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களின் மதிப்பை அம்பேவெல முன்னிறுத்துவதோடு, புத்துணர்ச்சி மற்றும் தரத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் பயணம் இலங்கையின் பால் பண்ணைத் துறையின் வளர்ச்சியுடனும், உள்ளூர் பால் துறை மீதான நன்மதிப்பை வலுப்படுத்துவதில் அது ஆற்றிய பங்களிப்புடனும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.
எனவே, இந்த அங்கீகாரம் என்பது அம்பேவெலவின் பயணத்தில் பங்களித்த நுகர்வோர், ஊழியர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகிய அனைவருடனும் பகிர்ந்துகொள்ளப்படும் ஒரு கூட்டு வெற்றியாகும். அம்பேவெல பால் ஒருபோதும் பால் மா அல்லது வேறு எந்தப் பதிலீட்டுப் பொருட்களையும் கொண்டு கலப்படம் செய்யப்படுவதில்லை. இப்பால் அதன் தூய வடிவில் கிடைப்பதோடு, அதிக கொழுப்புச் சத்து மற்றும் பால் சார்ந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உயர்தரமானதாகவும் உள்ளது. அம்பேவெல பண்ணைகளில் வளர்க்கப்படும் ஃப்ரீசியன் (Friesian) மற்றும் அயர்ஷயர் (Ayrshires) இன கறவைப் பசுக்கள், உயர்தரமான பாலை வழங்குவதற்கு ஏற்ற சிறந்த மரபணுப் பின்னணியைக் கொண்ட உலகின் மிகச் சிறந்த கறவைப் பசுக்களாகக் கருதப்படுகின்றன.
இந்த சர்வதேச அங்கீகாரம் அம்பேவெலவின் நம்பகத்தன்மையையும் உயர்தர நிலைப்பாட்டையும் வலுப்படுத்துவதோடு, பரந்த தளத்தில் இலங்கையின் முன்னணி பால் வர்த்தகநாமம் என்ற அதன் நற்பெயரையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
அம்பேவெல இந்த முக்கிய சாதனை மைல்கல்லைக் கொண்டாடும் அதே வேளையில், இலங்கையின் பால் பண்ணைத் துறையின் வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பை அளித்துக்கொண்டு, நுகர்வோரும் தேசமும் பெறத் தகுதியான உயர்தரமான, கலப்படமற்ற பாலை பண்ணையிலிருந்து குடும்பங்கள் வரை கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.

You must be logged in to post a comment.